சூழல் பிரச்சினைகள்
எமது அன்றாடச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் எவ்வளவு தூரம் சூழலைப் பாதிக்கிறது என நாம் சிந்திப்பதில்லை. இவற்றின் விளைவுகளெல்லாம் பூதாகரமாகி எம்மை அணுகும் போது கூட, அதை நாம் உணர்வோமோ தெரியவில்லை. இத்தகையதோர் சூழ்நிலையிலே, சூழல் தொடர்பான விழிப்புணர்வும் அவசியமாகிறது.
சூழல் மாசுறல்
வளி மாசடைதல்:
பல்வேறு வகையான வேதியியற் பொருட்களும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது. தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் காபனோரொட்சைட்டு, கந்தகவீரொட்சைட்டு, குளோரோபுளோரோகாபன்கள், நைதரசன் ஒட்சைட்டுகள் என்பன இத்தகைய மாசுப்பொருள்களுக்கு எடுத்துக்
காட்டுகளாகும்.
நீர் மாசடைதல்:
வளிமண்டலத்தில் கலக்கும் மாசுக்கள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் போன்றவற்றையும் மாசுபடுத்துகின்றன. இதைவிட, தொழிற்சாலைகள் நேரடியாகவே கழிவுப் பொருட்களை ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.
மண் மாசடைதல்:
தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிநாசினிகள், களைநாசினிகள் என்பனவற்றின் பெருமளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமாதல்
புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணம்.
கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும்.
பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும், பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது.
வறட்சி
பல காலமாக மழையில்லாத வரண்ட மற்றும் தண்ணிர் பற்றாகுறையுள்ள நிலப்பகுதியை வறட்சி என்பர். வறட்சி வாய்ந்த பகுதியில் மழைமிகவும் குறைந்தளவில் காணப்படும். இதனால் வேளாண்மையை நம்பி வாழும் மக்களுக்கு இது ஏற்றது அல்ல.
காடழிப்பே இதற்கு முக்கிய கரணமாகும்.
பாலைவனமாதல்
வரண்ட, ஓரளவு வரண்ட அல்லது ஈரப்பதன் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இது வழமையாக மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும்
காடழிப்பு
காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது.
உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில் துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருட்களில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மண்ணரிப்பு
மனித நடவடிக்கைகளோடு தொடர்புடைய முக்கிய காரணிகளாக, காடழிப்பு, அளவு மீறிய மேய்ப்பு, செறிவான வேளாண்மை, தொழில்மயமாக்கம், நகராக்கம் என்பவை மண்ணரிப்புக்கான காரணங்களாக விளங்குகின்றன.
ஓசோன் படல அழிவு
காபனீரொட்சைட், மெதேன், நைதரசன்ரொட்சைட் போன்ற வாயுக்களும் பச்சை இல்ல வாயுக்களுள் அடங்குகின்றன. கடந்த இரு நூற்றாண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் இவ்வாயுக்கள் அதிகளவில் வெளிவிடப்பட வழி வகுத்தமையால், வளிமண்டலத்தில் இவ்வாயுக்களின் செறிவு அதிகரிக்கப்பட்டு புவி வெப்பமயமாதல் தோற்றுவிக்கப்படுகிறது இதனால் ஓசோன் படை தேய்வடைகிறது.